கடலூர்- விருத்தாசலம் வரை புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் குறிஞ்சிப்பாடி ஆண்டிக்குப்பம் அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து வெளியே தெரிகின்றன. இதனால் இரவு வேளைகளில் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கி கீழே விழும் அபாயம் உருவாகியுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.