மயிலம் அருகே பெரியதச்சூர்- எசாலம் செல்லும் சாலையானது பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த சாலையை விரைந்து சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.