பெரம்பலூர் மாவட்டம், கழனிவாசல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களில் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
