குண்டும், குழியுமான சாலை

Update: 2025-03-09 13:29 GMT

திருவள்ளூர் மாவட்டம், அலமாதி ஊராட்சி, திருவள்ளூர் தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சிறிது மழை பெய்தாலே சாலையில் மழைநீர் தேங்கிவிடுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சில நேரம் விபத்தும் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்