சாலையை சரி செய்யவேண்டும்

Update: 2025-03-09 13:27 GMT

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம், சாஸ்திரிநகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சாலையில் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே அந்த சாலைகளில் செல்லும் போது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்