ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை- தேவக்கோட்டை செல்லும் வழித்தடத்தின் நடுவே அதங்குடியிலிருந்து அல்லிக்கோட்டை வரை செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்து கரடு முரடாக உள்ளது. இதனால் அவ்வழியே பயணிக்கும் வாகனங்கள் குறிப்பாக அரசு பஸ்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. மேலும் சாலையில் பயணிப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட சாலையை சீரமைக்க வேண்டும்.