அரியலூரில் இருந்து வி.கைகாட்டி வரை செல்லும் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் இவ் வழியாக சிமெண்டு ஆலைகளுக்கு செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அரியலூரில் இருந்து வி.கைகாட்டி செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.