சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-03-09 10:53 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா மேலராதாநல்லூர் பகுதி கோதமனார் கோவிலில் இருந்து திருமாஞ்சோலை,காவாலக்குடி,ஆளத்தான்குடி பகுதிக்கு செல்ல சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் சாலையில் இருக்கும் பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்