அபாயக்குழியால் வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2025-03-09 09:50 GMT


பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்தப்பகுதியில் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அபாய குழி உள்ளது. இந்த குழியில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இரவு நேரங்களில் குழி இருப்பது தெரியாமல் வாகனங்கள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலசாமி, பல்லடம்.

மேலும் செய்திகள்