பர்கூர் ஒன்றியம் பாலிநாயனப்பள்ளி ஊராட்சி கோனேரிகுப்பம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் வாத்தியார் கொட்டாய் பஸ் நிறுத்தத்தில் இருந்து கோனேரி குப்பம் வரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். இந்த சாலையை தரமான சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.