நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி முன்பு இருந்த வேகத்தடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் ஆஸ்பத்திாிக்கு வருவோர் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே அங்கு மீண்டும் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.