திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே செங்குளம் பகுதியில் சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சிலர் வீசிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதுடன், அவற்றை வீசிச்செல்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.