ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் லக்கையன்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் வெள்ளைக்கோடு வரையப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே வேகத்தடையில் வெள்ளைக்கோடு வரைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.