மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி ஊராட்சியில் உள்ள முருகன்தாங்கல்பட்டி கிராம சாலை பெஞ்ஜல் மழை வௌ்ளத்தால் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அங்கு புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?