ஈரோடு சம்பத்நகர் ராணி வீதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி பல மாதங்களாகியும் இன்னும் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாக கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க அதிகாரிகள் குழியை மூட முன்வருவார்களா?