திருவாரூர் மாவட்டம் ஆத்தூர் சாலை முதல் ஊட்டியாணி வரை செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும், சாலையில் ஜல்லிக்கற்கள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.