புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட உள் கடைவீதி, காமராஜர் அங்காடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கடைகளை பரப்பி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் அழுகிய பழங்கள், வாழைத்தார் கட்டைகள், குப்பைகளை சாலையில் வீசுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தடுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே கறம்பக்குடி பேரூராட்சி உள் கடை வீதி ஆக்கிரமிப்பை அகற்றவும், குப்பை கழிவுகளை முறையாக அகற்றி சாலையை பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.