ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதம் அடைந்து கரடு முரடாக உள்ளது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.