சென்னை திருவொற்றியூர், விம்கோநகர் ரெயில்நிலையம் அருகில் சுரங்கபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தினந்தோறும் செல்லும் வழி அடைக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்க பாதை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட நாட்களாக மாற்று வழியில் சென்று அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுரங்கபாதை பணியை விரைவாக நடத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.