சாலையில் தேங்கும் மண்

Update: 2025-03-02 10:23 GMT

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் தினமும் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி பஸ்கள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் செல்லும் கல்குவாரி, கிரசர், சிமெண்டு உள்ளிட்ட கனரக வாகனங்களில் இருந்து விழும் சிறுகற்கள், மண் உள்ளிட்டவைகள் சாலையில் விழுந்து இருசக்கர வாகனங்கள் செல்லும் பகுதியில் சேர்கிறது. இவைகள் நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றப்படாமல் அப்படியே உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்