திருப்பூரில் இருந்த ஊத்துக்குளி செல்லும் பிரதான சாலையில் சர்க்கார் பெரியபாளையம் தாமரை கோவில் பகுதியில் பேக்கரி எதிரில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. இந்த பகுதியில் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் உள்ளே செல்லும் வாகனங்கள் சாலையை கடக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.