கோவை லாலிரோடு சந்திப்பு பகுதியில் போலீசார் அடிக்கடி வாகன சோதனை செய்கின்றனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். அத்துடன் நடந்து செல்லும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே அங்கு யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும்.