திருப்பூர் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் புதியதாக தார்ச்சாலை, காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க தக்கது. ஆனால் அந்த சாைலயை ஆங்காங்கே சேதப்படுத்தி, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் பதித்துள்ளனர். இதனால் புதியதாக போடப்பட்ட சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறிப்போனது. எனவே சாலை அமைக்கும் முன்பு குடிநீர் குழாய் பதித்தல், பாதாளசாக்கடை இணைப்பு கொடுத்தல் போன்ற பணிகளை முடித்து இருந்தால் சாலைகள் சேதமாகி இருக்காது. இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.