கரூர் ஒன்றியம் நெரூர் வடபாகம் ஊராட்சி பழையூர் மக்களின் தேவைக்காக சுடுகாட்டில், தகன மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த சுடுகாட்டை சுற்றி செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடல்களை இந்த மண் சாலை வழியாக எடுத்துச்செல்ல முடியாமல் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சுடுகாட்டிற்கு புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.