வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-03-02 09:50 GMT

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கோப்பு கிராமத்தில் கல்லுகாடு பகுதியில் இருந்து எட்டரை ஒத்தகடை பகுதியை இணைக்கும் சாலையானது மண் சாலையாக உள்ளது. வெயில் காலங்களில் இந்த சாலை வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதினால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழைக் காலங்களில் இச்சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்