குண்டும், குழியுமான சாலை

Update: 2025-03-02 09:50 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் உள்ள அய்யனார் கோவிலில் இருந்து உருமநாதர் கோவில் வரை ஒரு கிலோ மீட்டர் தார் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்கள், கர்பிணிகள், பெண்கள் இந்த சாலையில் நடந்து செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்