மேல்மலையனூர் தாலுகா வடவெட்டி ஊராட்சி கீழ்செவளாம்பாடி-பெருவளூர் செல்லும் சாலையானது பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.