சங்கராபுரம் அருகே பாண்டலம் ஏரிக்கரை அருகில் அமைந்துள்ள சாலையானது பலத்த சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.