கீழே விழும் வாகன ஓட்டிகள்

Update: 2025-02-23 17:24 GMT

திருச்சி ராமச்சந்திரா நகர்- செட்டியப்பட்டி பாலம் செல்லும் சாலையின் நடுப்பகுதியில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் அடிக்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்