சேதமான கான்கிரீட் சாலை

Update: 2025-02-23 16:39 GMT

தர்மபுரி இலக்கியம்பட்டி வி.பி.சிங் தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கான்கிரீட் சாலையின் பக்கவாட்டு பகுதியில் கடந்த மாதம் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. இதனால் சாலையின் பக்கவாட்டு பகுதிகள் சேதமடைந்தன. இந்தப் பகுதிகளில் மண் கொட்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்த கான்கிரீட் சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்