ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இதில் 15-வது வார்டு சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குளியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.