அரியலூர் மாவட்டம் செந்துறையில் உடையார்பாளையம் திரும்பும் சாலையிலும், அரசு மருத்துவமனை செல்லும் சாலையிலும் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் கூட இந்த சாலை வழியாக விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.