வர்ணம் பூசப்படாத வேகத்தடை

Update: 2025-02-23 13:13 GMT

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் கிராமத்தில் புகழ்பெற்ற பாலதண்டாயுதபாணிகோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆலத்தூர் கேட் - செட்டிக்குளம் சாலையில் செட்டிக்குளம் மாரியம்மன் கோவில் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளது. மேலும் இதன் அருகே சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்