கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, வாங்கப்பாளையம் முதல் அரசு காலனி வரை 6 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வேகத்தடைகளின் அருகே அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாமல் உள்ளது. மேலும் வேகத்தடைகளில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த வேகத்தடைகளின் மோதி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடைகள் உள்ள இடங்களில் அறிவிப்பு பலகை வைப்பதுடன் வேகத்தடைகளில் வெள்ளை வர்ண கோடுகள் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.