தாராபுரம்-திருப்பூர் சாலையில் எஸ்.பி.ஐ. வங்கிக்கு எதிரே சாலையின் நடுவில் பள்ளம் இருந்தது. இ்ந்த பள்ளத்தை சீரமக்காமல் திட்டு, திட்டாக விட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் திட்டுகள், பள்ளம் இருப்பது தெரியவில்லை. கோவில்வழியில் இருந்து இரவு நேரங்களில் திருப்பூர் பழைய பஸ் நிலையம் நோக்கி குடும்பத்தோடு இருசக்க வாகனங்களில் வருபவர்கள் இ்ந்த சாலை திட்டில் சிக்கி வாகனத்தோடு விழுந்து விடுகிறார்கள். எனவே அந்த பகுதியில் மட்டும் சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.