நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை உள்ளது. இந்த பகுதியில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாக வரும் பஸ்கள் நின்று செல்வதற்காக போக்குவரத்து போலீசாரின் முயற்சியால் தற்காலிக பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோட்டப்பட்டு மூடப்படாமல் காணப்படுகிறது. இதனால், பயணிகள் நிற்பதற்கு இடமில்லாததால் சாலையோரத்தில் நிற்கவேண்டிய நிலை உள்ளது. இதன்காரணமாக பஸ்கள் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவததால் பின்னால் வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை சரிசெய்ய அங்கு நிரந்தர பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரவிந்த் தவமணி, குளச்சல்.