தடுப்பு சுவர் கட்ட வேண்டும்

Update: 2025-02-23 10:05 GMT

கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் ராக்லேண்ட் தெருவுக்கு திரும்பும் பகுதியில் சாலையோரம் மழைநீர் ஓடும் கால்வாய் உள்ளது. இதன் கரையோரம் தடுப்பு சுவர்கள் கட்டப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சில சமயங்களில் கால்வாயில் வாகனங்களை இறக்கி விடுகின்றனர். இவ்வாறு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு தடுப்பு சுவர்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்