கூடலூரில் இருந்து வயநாடு செல்லும் சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட இல்லை. இதனால் விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது. எனவே இனிவரும் நாட்களிலாவது அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.