திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் தாலுகா செல்லிப்பாக்கம் அருகே உள்ள கொளக்குடியில் இருந்து தும்பலம் வரையிலான 2 கிலோமீட்டர் சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்வும் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.