கரூர் மாவட்டம், புகழூர் 4 ரோடு முதல் நாணப்பரப்பு வாரை சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையில் பல இடங்கள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.