சென்னை அடையாறு, பெசன்ட் நகர் 1-வது அவென்யூ சர்விஸ் சாலை மிகவும் மோசமாக நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது, இந்த சாலையில் சாஸ்திரி நகர் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. அருகில் பெசன்ட் நகர் பஸ் டெப்போ அமைந்துள்ளது. சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.