கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பஸ் நிறுத்த முன்பகுதியில் மேம்பாலம் இறங்கும் இடத்தில் ‘யூ-டர்ன்’ அமைக்கப்பட்டு உள்ளது. மேம்பாலத்தில் இருந்து இறங்கி வரும் வாகனங்கள் அந்த ‘யூ-டர்ன்’ வழியாக கவுண்டம்பாளையம் செல்ல திரும்பும்போது, எதிரே எந்த வாகனம் வருகிறது என்பதை பார்த்து திரும்ப முடியாத வகையில், அங்கு சாலை தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அங்கு அமைக்கப்பட்டு உள்ள சாலை தடுப்பை உடனடியாக அகற்ற வேண்டும்.