மதுரை செல்லூர் பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைவதோடு சாலையை கடக்கும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், முதியோர்களும் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.