நாமக்கல்-திருச்சி சாலையில் இருந்து மோகனூர் சாலைக்கு இணைப்பு சாலையாக டாக்டர் சங்கரன் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் தலைமை தபால் நிலையம், அரசுடமையாக்கப்பட்ட வங்கி கிளை, எல்.ஐ.சி. அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இதனால் இங்கு தினசரி ஏராளமான நபர்கள் வந்து செல்கின்றனர். இந்த சாலையில் நுழையும் இடத்தில் பாலத்தின் அருகே அபாயகரமான குழி ஏற்பட்டு உள்ளது. இதில் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்வோர் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.