தரமற்ற சாலை

Update: 2025-02-09 14:09 GMT

திருவள்ளூர் மாவட்டம் சீமாபுரம், சின்ன சீமாபுரம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில் பேவர் பிளாக் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை போடப்பட்டு முழுவதுமாக ஒரு மாத காலம் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் சாலையின் குண்டும் குழியுமாக பழுதடைந்து தரமற்று காணப்படுகிறது. தரமற்று போடப்பட்ட சாலையை அமைத்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புதிய சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்