திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து முக்கொம்புக்கு செல்லும் வழியில் அல்லூர் பகுதி உள்ளது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையின் நடுவே தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
.
.