ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி தர்கா-சேர்மன் தெரு வரை சாலை சேதமடைந்தது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றன. மேலும் வாகனஓட்டிகள் சிறு,சிறு விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?