ராமநாதபுரம் நகர் நீலகண்டி ஊருணி, கே.கே. நகர், மீனாட்சிபுரம், கொட்டகை, வலம்புரி நகர், கலத்தாவூர் வரை செல்லும் சாலை ஆங்காங்கே பெயர்ந்து மிக மோசமான நிலையில் உள்ளது. மேலும் சில இடங்களில் பெரும் பள்ளங்களாக உள்ளது. இதனால் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளதுடன், விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?