பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்திலிருந்து பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டுக்கு செல்வதற்கு உள்ள தார் ரோடானது பழுதடைந்துள்ளது. மேலும் அந்த ரோட்டில் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியும் உள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் குழிக்குள் வாகனங்களை இறக்கி நிலைதடுமாறி விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் அந்த வழியே செல்வதற்கு அச்சமாக உள்ளதால், குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.
காமேஷ், பல்லடம்.