ராமநாதபுரம் நகர் பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் மாடுகள் அதிகளவு சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகள் சாலையில் படுத்துக்கொள்வதால் வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. மேலும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.